ஆஸ்கர் விருது- 6 விருதுகளை வென்றது ‘Dune’ திரைப்படம்

News, World

 205 total views,  4 views today

நியூயார்க்-

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.  

இதுவரை வழங்கப்பட்ட விருதுகளில், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில், ‘டுன்'(Dune) என்ற திரைப்படம்  விருதுகளை குவித்துள்ளன. சிறந்த அனிமேஷன் படமாக, டிஸ்னி தயாரித்த ‘என்காண்டோ’ (Encanto) திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த துணை நடிகைக்கான விருது, ‘வெஸ்ட் செட் ஸ்டோரி’ திரைப்படத்தில் நடித்த ஹரியானா டிபோஸ் என்ற நடிகை வென்றுள்ளார். இவர் நடிப்பு பிரிவில், ஆஸ்கர் விருது பெறும் முதல் குயர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை,  ஜென் ஷாம்பியன் இயக்கிய  ‘தி பவர் ஆஃப் டாக்’ என்ற திரைப்படம் 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.     

பட்டியல்:

சிறந்த நடிகர் – வில் ஸ்மித்

சிறந்த நடிகை – ஜெசிகா சாஸ்டெய்ன்

சிறந்த திரைப்படம் – கோடா

சிறந்த இயக்குனர் – ஜென் ஷாம்பியன்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – என்காண்டோ

சிறந்த படத்தொகுப்பு – ஜோ வாக்கர் (டுன் திரைப்படம்)

சிறந்த துணை நடிகர் – ஹரியானா டிபோஸ்சிறந்த சர்வதேச திரைப்படம் – டிரைவ் மை கார்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – தி லாங் குட்பை

Leave a Reply