இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தினார் !

News, World

 62 total views,  1 views today

– குமரன் –

இலண்டன் – 9 செட்டம்பர் 2022

பிரட்டன் அரியணை நாயகி இரண்டாம் எலிசபெத் அரசியார்  தமது 96வது  வயதில் இயற்கை எய்தினார் என பக்கிங்கம் அரண்மனை அறிவித்தது.

உடல் நலக் குறைவு ஏற்பட்ட பிறகு அவரது வசிப்பிடமான பல்மோரல் மாளிகையில் அரச குடும்பத்தார் சூழ நேற்று இரவு அவர் தமது இறுதி மூச்சை விட்டார்.

பிரிட்டனின் நீண்ட கால அரியணை நாயகியாகவும் உலகின் இரண்டாவது நீண்ட கால அரசியுமான எலிசபெத் அரசியார் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே “episodic mobility problems” எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மிக அதிகால மன்னராட்சியை பிரான்சு நாட்டின் 14வது லூயிஸ் 1643 முதல் 1715 வஐ 72 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1952 இல் இருந்து தமது 25 வயதில் பிரட்டனின் அரசியாக அரியணை ஏறிய அவர் கடந்த ஜூன் மாதம் 70 ஆண்டுகாலம் ஆட்சி அமைத்து வந்தார்.

தமது ஆட்சி காலத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் லிஸ் சிரஸ் வரை 15 பிரதமர்களைக் கண்டவர் அவர்.

கடந்த 1996 ஆம் ஆண்டு சீன நாட்டுக்கு வருகை புரிந்த முதல் அரசியார் அவர்தான். வாசிங்டன் நாடாளுமன்றத்தில் குறிப்பிடப்பட்ட முதல் அரசியாரும் அவர்தான். கடந்த 26 மார்சு 1976இல் அவர் இங்கிலாந்து தற்காப்பு அமைச்சுக்கு வருகை தந்த போது முதல் மின்னஞ்சலையும் அனுப்பி இருக்கிறார்.

1997இல் பக்கிங்கம் அரண்மனையின் இணையப் பக்கத்தை வெளியிட்டதோடு 2014இல் முதல் டுவிட்டையும் பதிவு செய்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கி இருந்தார்.

இரண்டாம் எலிசபெத் அரசியார் மலேசியாவுக்கு மூன்று முறை வருகை புரிந்துள்ளார்.

1972இல் முதன் முறையாக மலேசியாவுக்கு சிறப்பு வருகை புரிந்த அவர், 1989இல் 11வது காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திற்கும் 1998இல் மலேசியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவுக்கும் வருகை புரிந்திருந்தார்.

Leave a Reply