இசைக்குயிலின் குரல் ஓய்ந்தது- லதா மங்கேஷ்கர் காலமானார்

Uncategorized

 158 total views,  1 views today

சென்னை-

இந்தியாவின் இசைக்குயில் என புகழப்படும் பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) உடல் நலக்குறைவின் காரணமாக இன்று மரணமடைந்தார்.
4 வயதில் பாட ஆரம்பித்த லதா மங்கேஷ்கர், இந்தி, தமிழ் என இதுவரை 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்ளை பாடியுள்ளார்.
தேனினும் இனிய குரலால் 80 ஆண்டுகளாக இசைத்துறையில் கோலோச்சிய லதா மங்கேஷ்கருக்கு 2001ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் 1989ஆம் ஆண்டில் இவர் பெற்றிருந்தார்.
லதா மங்கேஷ்கரின் மறைவு பாரத பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பலர் அரசியல் பிரமுகர்களும் திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply