இடம் மாறும் ஜசெக தலைவர்கள் ?

Malaysia, News, Politics, Polls

 115 total views,  1 views today

இரா.தங்கமணி

கோலாலம்பூர் – 14/10/2022

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில் எந்தெந்த தொகுதியில் யார் வேட்பாளர்கள்? என்ற கேள்வியும் ஆருடமும் வலுத்து வருகிறது.

அதன்படி ஜசெகவைச் சேர்ந்த சில தலைவர்கள் தொகுதிகள் இடம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜசெக துணைத் தலைவர் கோபிந்த் சிங் இம்முறை கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடும் என கணிக்கப்படுகிறது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ் இம்முறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக களமிறங்ககுகூடும் என முன்பே கணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் கணபதிராவ் போட்டியிடக்கூடும் என நம்பப்படுகிறது.

பினாங்கு மாநில துணை முதல்வராக இருக்கும் பேராசிரியர் பி.இராமசாமி அப்பதவியை தக்க வைக்கவே விரும்புகிறார் எனும் நிலையில் நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கலாம்.

ஜசெகவின் துணைச் செயலாளராக இருக்கும் வீ.சிவகுமார், தமது பத்துகாஜா நாடாளுமன்றத் தொகுதியிலேயே போட்டியிடக்கூடும்.

ஜசெகவின் உதவித் தலைவர்களில் ஒருவரான எம்.குலசேகரன் வேறொரு தொகுதிக்கு மாறலாம் என நம்பப்படுகிறது. ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதி ஜசெகவுக்கு எப்போதும் பாதுகாப்பான தொகுதி என கருதப்படுவதால் அங்கு புது முகத்தை களமிறக்கி குலசேகரன் ஜொகூரில் உள்ள ஏதேனும் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கலாம்.

பேரா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன் இம்முறை தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கலாம். கடந்த மூன்று தவணையாக சுங்காய் சட்டமன்றத் தொகுதியை தற்காத்து வரும் சிவநேசனின் அடுத்தக்கட்ட நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது.

Leave a Reply