இடைக்கால பிரதமர் ஆனார் டான்ஶ்ரீ முஹிடின் யாசின்

Uncategorized

 387 total views,  3 views today

கோலாலம்பூர்-

பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ள டான்ஶ்ரீ முஹிடின் யாசின் இடைக்கால பிரதமராக (Caretaker Perdana Menteri) செயல்படுவார் என்று அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்த டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதோடு ஒட்டுமொத்த அமைச்சரவையும் கலைக்கப்பட்டது

இன்று நண்பகல் 12.30 மணியளவில் மாமன்னரை சந்தித்த டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தமது பதவி விலகல் கடிதத்தை வழங்கினார்.
பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் ஒருவர் புதிய பிரதமராக பதவியேற்கும் வரையிலும் இடைக்கால பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் செயலாற்றுவார் என்று அரண்மனை கூறியுள்ளது.

Leave a Reply