இதயத்தைப் பாதுகாப்போம் ! – உலக இதய நாளில் கவிதா சிவசாமி

Health, Malaysia, News, World

 73 total views,  1 views today

– குமரன் –

ஜோர்ஜ்டவுன் – 29 செப் 2022

மனித உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு. லப் டப் என்று ஓயாமல் துடித்துக்கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான வார்த்தைகளை மனிதர்களுக்கு உணர்த்திக்கொண்டுதான் உள்ளது. ஆயுள் முடியும் தருணத்தில்தான் இதயம் துடிப்பது நிற்கும். உலக இதய நாள் கடைபிடிக்கப்படும் இந்த நாளில் இதயத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை முறையில் அதனை நடைமுறைப்படுத்துவோம் எனக் கூறுகிறார் பினாங்கு மாநில ம.இ.கா.வின் மகளிர் பிரிவு தலைவியும் ம.இ.கா. தேசிய மகளிர் பணிப்படைத் தலைவியுமான கவிதா சிவசாமி.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் இதய நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சராசரியாக நம் இதயத்தின் எடை 300 கிராம். சாதாரணமாக, இதயமானது ஒவ்வோர் இதயத் துடிப்பின்போதும் சுமார் 70 மி.லி. இரத்தத்தை உடலுக்குள் அனுப்புகிறது. இதை நிமிடத்துக்குச் சொன்னால் 5 லிட்டர். கடுமையான உடற்பயிற்சியின்போது நிமிடத்துக்கு 20 லிட்டர் வரையிலும், ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது 30 லிட்டர் வரையிலும் இது அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதயம் துடித்தால் மட்டுமே நாம் உயிர்வாழ முடியும். இதயத்துக்கு வந்து சேரும் அசுத்த ரத்தத்தில் உயிர்வளி எனக் கூறப்படும் ஆக்சிஜன் குறைவாக இருக்கும். கரிய அமில வளி எனும் கார்பன்டை ஆக்ஸைடு அதிகமாக இருக்கும். அதை நுரையீரல்களுக்கு அனுப்பி, கார்பன்டை ஆக்ஸைடை அதற்குக் கொடுத்துவிட்டு, பதிலாக ஆக்ஸிஜனைப் பெற்று சுத்த ரத்தமாக மாற்றி மீண்டும் இதயத்துக்குக் கொண்டு வந்து உடலுக்குத் தருகிறது. அந்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் மட்டுமல்லாமல், உணவுச் சத்துகளும் உள்ளன. இதனால்தான் உடல் இயங்குகிறது. இதயம் செய்யும் இந்தப் பணியால்தான் நாம் உயிரோடு உலாவிக்கொண்டிருக்கிறோம்.

இதயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் அனைவரும் தங்களுடைய இதயத்தை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

எனவே, இதயத்தைக் காக்கின்ற ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ர நடவடிக்கைகளை நமது வாழ்க்கை முறையில் சேர்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வோம் என கவிதா சிவசாமி குறிப்பிட்டார்.

Leave a Reply