இத்தனை நாட்கள் கோமாவில் இருந்தீர்களா? – வீரன் சாடல் (Video News)

Uncategorized

 309 total views,  1 views today

ரா.தங்கமணி

ஈப்போ – 6 ஏப்ரல் 2022

இந்தியர்களுக்கான அடையாள  அட்டை, குடியுரிமை விவகாரங்களில் உரிய தீர்வு காண அப்போதைய பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த முஹிடின் யாசின் தடையாக இருந்தார் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எம்.வீரன் குறிப்பிட்டார்.

14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 22 மாதங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்தியர்களுக்கான குடியுரிமை விவகாரங்களுக்கு தீர்வு காணபதும் முக்கியமானதாக இருந்தது.

அத்தகைய சூழலில் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார் என்றால் குலசேகரனும் அதே அமைச்சரவையில் தான் மனிதவள அமைச்சராக பதவி வகித்தார்.

ஆனால் இந்தியர்களின் குடியுரிமை, அடையாள அட்டை ஆவண விவகாரங்களில் டான்ஶ்ரீ முஹிடின் தடையாக இருந்தபோதும் கூட அப்போதே வாய் திறக்காமல் இப்போது ஊடகங்களின் வழி அறிக்கை விடுவதனால் என்ன நன்மை வந்து விடப்போகிறது?

ஆளும் கட்சியில் அமைச்சராக பதவி வகித்தபோது சமுதாயத்திற்காக எதையுமே செய்யாமல் ஆட்சியையும் கோட்டை கைநழுவ விட்டுவிட்டு இப்போது குரல் கொடுப்பது எதற்காக?

பதவியில் இல்லாமல் இருந்தால்தான் எதற்குமே குரல் கொடுக்க முடியும் என்றால் எதற்கு ஆளும்கட்சியாக மாற ஆசைப்படுகிறார்கள்? இறுதிவரை எதிர்க்கட்சியாக இருந்து விட்டு மக்களுக்காக குரல் கொடுங்கள். அதுவே சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய கைம்மாறு ஆகும்.

இந்தியர்களின் குடியுரிமை விவகாரம் குறித்து ஆட்சியில் இருந்தபோதும்  ஆட்சி பறிபோனபோதும் குரல் கொடுக்காமல் இப்போது வெற்று அறிக்கை விடும் குலசேகரன், இத்தனை நாட்கள் கோமாவில் இருந்தாரா? என்றே கேள்வி எழுப்ப தோன்றுகிறது என்று தைப்பிங் தொகுதி மஇகா தலைவருமான வீரன் சொன்னார்.

Leave a Reply