இந்தியப் பெண்களை முன்னிறுத்திய ஜசெக கிளை அறிமுகம் கண்டது

Malaysia, News, Politics

 160 total views,  1 views today

ரவாங்-

சிலாங்கூர் மாநில ஜசெகவில் முதல் முறையாக இந்திய பெண்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட ஜசெக கிளை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டது.

ரவாங் செக்‌ஷன் 4 பண்டார் கன்ட்ரி ஹோம் எனும் புதிய கிளையை திருமதி புவனேஸ்வரி என்பவர் தொடங்கியுள்ளார். முழுக்க முழுக்க பெண்களை கொண்டு பெண்களாலேயே  வழிநடத்தப்படும் இந்த புதிய கிளையை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தேசிய அரசியல் நீரோட்டத்தில் இந்தியப் பெண்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்க வேண்டும். அதற்கு இந்த பெண்மணிகளே சிறந்த உதாரணம். இன்னும் இந்தியப் பெண்களை உள்ளடக்கிய கிளைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

திருமதி மாரியம்மாள் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட இந்த ஜசெக கிளையில் அறிமுக நிகழ்வில் YB லாவ் இங் சான்,  சிலாங்கூர் மாநில ஜசெக மகளிர் பிரிவைச் சேர்ந்த திருமதி புவனேஸ்வரி, ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர் ராய்டு, உட்பட சிலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply