
இந்தியர்களின் பிரச்சினைகள் என் தோளில் மட்டும் ஏற்றப்படவில்லை- சிவகுமார்
177 total views, 1 views today
புத்ராஜெயா-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஓர் இந்தியர் மட்டும் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது தொடர்பில் இந்தியர்கள் அதிருப்தி அடைய தேவையில்லை என்று மனிதவள அமைச்சர் வீ.சிவகுமார் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த அமைச்சரவையும் நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபடும். இதில் இந்தியர்கள் விடுபட மாட்டார்கள்.
இந்தியர்களின் பிரச்சினைகள் அனைத்தும் என் தோளில் மட்டும் ஏற்றப்படவில்லை. அந்தந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய அமைச்சுகள் செயல்படும்.
மேலும் இந்தியர்களின் பிரச்சினைகளை களைய அந்தந்த தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகள் செயலாற்றுவார்கள்.
ஆதலால் ஓர் அமைச்சர் பதவி மட்டுமே இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற அதிருப்தி கொள்ள வேண்டாம் என்று என்று மனிதவள அமைச்சில் தனது பணியை தொடங்கியபோது செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவகுமார் இவ்வாறு கூறினார்.