இந்தியர்களின் வாக்குகளுக்காகவே மஇகாவை குறை சொல்லி கொண்டிருக்கின்றனர்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics

 46 total views,  1 views today

ரா.தங்கமணி

இந்திய சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காகவே மஇகாவை குறை சொல்வதை எதிர்க்கட்சியினர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சாடினார்.

இந்திய சமுதாயத்திற்காக பாடுபட்டு கொண்டிருக்கும் கட்சி மஇகா. மஇகாவின் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்திய சமுதாயத்திற்கு மஇகா எதுவுமே செய்யவில்லை என்று குறை கூறுவதையே எதிர்க்கட்சியினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

22 மாதங்கள் ஆட்சி புரிந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இந்திய சமுதாயத்திற்காக என்ன செய்தது? என்பதை அவர்களால் சொல்ல முடியாது.

பினாங்கு, சிலாங்கூர் மாநிலங்களில் கடந்த 15 வருடங்களாக ஆட்சி புரிந்து வரும் பக்காத்தான் ஹராப்பான் தனது சாதனை சொல்லி வாக்குகளை பெறலாமே? ஆனால் மஇகாவை மட்டுமே ஏன் குறை சொல்லி கொண்டிருக்க வேண்டும்?

மஇகாவை குறை சொன்னால் மட்டும்தான் இந்தியர்களின் வாக்குகளை பெற முடியும் என்பதால் மஇகாவை குறை சொல்லி கொண்டிருக்கின்றனர் மஇகாவின் 76ஆவது பேராளர் மாநாட்டில் உரையாற்றியபோது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Leave a Reply