இந்தியர்களுக்காக பொது இயக்கங்கள் துணிந்து குரல் கொடுக்க வேண்டும்- டத்தோஶ்ரீ அன்வார் (Video News)

Malaysia, News, Politics

 263 total views,  4 views today

உலு சிலாங்கூர்-

இந்தியர்களை பிரதிநிதிக்கின்ற அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் இந்தியர்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு துணிந்து குரல் கொடுக்க வேண்டும் என்று பிகேஆர் க்ட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அரசிடமிருந்து மானியங்களை பெற்றாலும் பொது இயக்கங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

என் கருத்துபடி பொது இயக்கங்கள் சுதந்திராகா செயல்பட வேண்டும். சுகாதாரம் போன்ற வளர்ச்சி திட்டங்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதில் எவ்விர பிரச்சினையும் கிடையாது.

அதேவேளையில் இந்தியர்களின் பிரச்சினைகளையும் கொண்டு வருவது அவசியம். அத்தகைய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வே இல்லை என்று கோலாலம்பூரில் உள்ள லேக் கிளப்பில் நடைபெற்ற பொது இயக்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பு நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.

SP Care நிறுவனர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் ஏற்பாடு இந்நிகழ்வில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இந்திய பொது இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குடியுரிமை, வறுமை, வேலையின்மை, நகர்ப்புற – கிராமப்புற ஏழைகள் போன்ற விவகாரங்களிள் பொது இயக்கங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

சிறந்த மாற்றத்தைக் கோரும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கடினமான சூழலை பற்றி கவலை கொள்ளாதீர்கள். இது மிக முக்கியமானதாகும். மாற்றத்தை நாம் கொண்டு வர வேண்டும். அதற்கு பொது இயக்கங்கள் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

Leave a Reply