இந்திய சமுதாயத்தின் உயர்வுக்கு பாடுபட்டவர் துன் சாமிவேலு ! – இரா.நந்தகுமார்

Malaysia, News, Politics

 221 total views,  1 views today

– இரா தங்கமணி –

கோலாலம்பூர் – 15 செப் 2022

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவராக பதவி வகித்த துன் ச.சாமிவேலு இந்திய சமுதாயத்தின் நாடி துடிப்பை அறிந்து செயல்பட்டவர் என்று கெடா மாநில மஇகா இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் இரா.நந்தகுமார் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் பதவி வகித்து அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. இந்திய சமுதாயம் பொருளாதார அடிப்படையிலும் கலவியிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்று அயராது பாடுபட்டவர்.

அவரின் உன்னத சிந்தனையாலேயே இன்று அனைவரும் அண்ணார்ந்து பார்க்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டது. மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற பலரின் கனவை நிறைவேற்றிய பெருமை அவரையே சாரும்.

இளைஞர் பிரிவுத் தலைவராக இருந்தபோது துன் சாமிவேலுவுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் இனிமையானவை. இந்திய சமுதாயத்தினர் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என பாடுபட்டவர் துன் சாமிவேலு. அவரின் திடீர் மறைவு மஇகாவினருக்க அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது.

அன்னாரின் ஆன்மா சாந்தி கொள்ளட்டும் என்று நந்தகுமார் குறிப்பிட்டார்.

Leave a Reply