இந்திய சமுதாயமே அனுகூலம் அடையும்- வீரன்

Malaysia, News, Politics

 102 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
எதிர்க்கட்சியினர் குறை கூறுவதுபோல் தீபாவளி காலகட்டத்தில் தேர்தலை வைத்து இந்திய சமுதாயத்தை தேசிய முன்னணி ஒருபோதும் அவமதித்ததில்லை என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன் தெரிவித்தார்.

பல இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதிலிருந்து தேமு ஒருபோதும் தவறியதில்லை. அதனடிப்படையிலேயே தேமுவில் தங்களது இனங்களை பாதுகாக்கக்கூடிய கட்சிகளாக அம்னோ, மஇகா, மசீச ஆகியவை உள்ளன.
15ஆவது பொதுத் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்க தேர்தல் ஆணையமே வரும் 20ஆம் தேதி தான் கூடுகிற நிலையில் தீபாவளியை முன்னிறுத்தி தேமுவை சாடுவதை எதிர்க்கட்சியினர் நிறுத்தி கொள்ள வேண்டும்.
அதோடு, தீபாவளி காலகட்டத்தையொட்டி தேர்தல் வருவதால் இந்திய சமூகத்துக்கு தான் பலவிதமான அனுகூலங்கள் கிடைக்கப்பெறும்.
இந்திய சமுதாயத்தின் மீது அனைத்துத் தரப்பினரின் கவனமும் இருக்கும்போது அதனால் பயனடையப் போவது இந்திய சமுதாயமே ஆகும் என தைப்பிங் தொகுதி மஇகா தலைவருமான வீரன் குறிப்பிட்டார்.

Leave a Reply