இந்திய சிறு வணிகர்களுக்கான ‘ஐ-சீட் தீபாவளிச் சந்தை’

Business, Economy, Local, Malaysia, News

 38 total views,  1 views today

– இரா. தங்கமணி –

ஷா ஆலம் – 19 செப் 2022

சிலாங்கூர் மாநில அரசின் ஐ-சீட் பிரிவின் ஏற்பாட்டிலான தீபாவளிச் சந்தை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்தோபர் 7,8,9 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரையிலும் கிள்ளான், டத்தாரான் செட்டி வளாகத்தில் தீபாவளிச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாய் சூரியா நிறுவனத்துடன் இணைந்து ஐ-சீட் பிரிவு இந்த தீபாவளிச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீபாவளிச் சந்தையில் 100 கூடாரங்கள் அமைக்கப்படும் நிலையில் ஐ-சீட் பிரிவின் மூலம் உதவி பெற்ற இந்திய வணிகர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

சிறு இந்நிய வணிகர்களுக்கு உதவிடும் வகையில் அமையவுள்ள இந்த தீபாவளிச் சந்தையை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தொடக்கி வைக்கவுள்ளார்.

இந்த தீபாவளிச் சந்தையில் அரசு நிறுவனங்களின் முகப்புகளும் மைசெல், மனிதவள மேம்பாட்டுப் பிரிவு ஆகியவற்றின் முகப்புகளும் அமைக்கப்படவுள்ளன.

இந்த தீபாவளிச் சந்தையில் வணிக நடவடிக்கைகள் மட்டுமின்றி உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள், சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, இளையோருக்கான நடனப் போட்டி, பெரியவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை உட்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என்று கணபதிராவ் சொன்னார்.

இதனிடையே,ஐ-சீட் பிரிவின் வெற்றி விழாவாகவே இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டதாகவும் ஆயினும் தீபாவளி மாதத்தை முன்னிட்டு தீபாவளிச் சந்தையாக இந்நிகழ்வு நடத்தப்படவுள்ளது என்று ஐ-சீட் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டிக்கம் லூதர்ஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு கிள்ளான் லிட்டில் இந்தியா வணிகர் சங்கத்தினர் முழு ஆரதவு வழங்கியுள்ளனர் என்பதோடு சிறு வணிகர்களுக்கான வர்த்தக வாய்ப்பாக இந்நிகழ்வு அமையவுள்ளது.

ஐ-சீட் பிரிவின் கீழ் இதுவரை 400க்கும் அதிகமானோருக்கு வர்த்தகப் பொருளுதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேருக்கு மட்டுமே இங்கு வணிகம் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுக்கு தினந்தோறும் 3,000 பேர் வருகை தருவர் என நம்பிக்கை கொள்வதாக கூறிய அவர், மக்களின் பேராதரவு கிடைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply