இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு மட்டுமே மானிய ஒதுக்கீடு- டத்தோ இளங்கோ

Malaysia, News, Uncategorized

 286 total views,  1 views today

ரா.தங்கமணி

ஈப்போ-

வறிய நிலையிலுள்ள இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உதவிநிதியாக மட்டுமே மாநில அரசு மானிய ஒதுக்கீடு செய்யப்படுகிறதே தவிர தமிழ்ப்பள்ளிகளுக்காக அல்ல என்று பேரா மாநில மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ தெரிவித்தார்.
மாநிலத்தில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு பின்னர் டத்தோ சரானி மாநில மந்திரி பெசாராக பதவியேற்ற பின்னர் அவருடன் நடத்தப்பட்ட சந்திப்பின் வாயிலாக 1 மில்லியன் வெள்ளி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னரே இந்த மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது 59 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் அவரவர் தொகுதிகளில் உள்ள ஏழ்மை நிலையிலான 10 இந்திய மாணவர்களின் பெயர் பட்டியலை கோரியுள்ளோம்.
அந்த பெயர் பட்டியல் இம்மாதத்திற்குள் கிடைக்கப்பெற்ற பின்னர் முறையாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பின்னர் உதவித்தொகை வழங்கப்படும் என்று டத்தோ இளங்கோ தெரிவித்தார்.

Leave a Reply