இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதியாக வெ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது- வீ.கணபதிராவ்

Uncategorized

 115 total views,  2 views today

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வரும் உயர்கல்வி மாணவர்களுக்கான கல்விநிதி உதவி வாயிலான இதுவரை 741 மாணவர்களுக்கு 30 லட்சம் வெள்ளி மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் தெரிவித்தார்.


கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு வரையிலும் 741 மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயனடைந்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு தாம் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் தீபாவளி, பொங்கல் போன்ற பெருநாள் காலங்களில் செலவிடப்பட்ட மானியங்களை பி40 வர்க்கத்தைச் சேர்ந்த இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தேன்.
அதன்வழி 2013இல் 15 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட கல்விநிதி உதவி இவ்வாண்டு 260 மாணவர்களாக உயர்ந்துள்ளது. முன்பு
இளநிலை (Degree) மாணவர்களுக்கு 5,000 வெள்ளியும் டிப்ளோமா மாணவர்களுக்கு 3,000 வெள்ளியும் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், இவ்வாண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இளநிலை மாணவர்களுக்கு 4,000 வெள்ளியும் டிப்ளோமா மாணவர்களுக்கு 2,000 வெள்ளியும் வழங்கப்பட்டது.


இந்த கல்விநிதி உதவியை பெறும் மாணவர்கள் அதனை திரும்ப செலுத்த தேவையில்லை எனவும் மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் இந்நிதி பல்கலைக்கழக, கல்லூரிகளின் பெயரில் வழங்கப்படுவதால் இந்நிதி தவறாக பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும் கணபதிராவ் தெரிவித்தார்.
அதோடு, இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சிலாங்கூர் மாநில அரசு முன்னெடுக்கும் இத்திட்டத்தை பிற மாநில, மத்திய அரசுகள் முன்னெடுக்க வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.

912,975.00 வெள்ளியை உள்ளடக்கிய இவ்வாண்டுக்கான முதற்கட்ட உயர்கல்வி உதவிநிதியில் IPTA எனப்படும் அரசு உயர்நிலை கூடங்களிலும் IPTS எனப்படும் தனியார் உயர்நிலைக்கூடங்களிலும் பயிலும் இளநிலை (Degree) மாணவர்கள் 199 பேருக்கும் டிப்ளோமா படிப்பை மேற்கொள்ளும் 60 மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்ட உயர்கல்வி உதவிநிதி திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள 259 மாணவர்கள் பெறுகின்றனர்.

68,000 வெள்ளி மதிப்பிலான இரண்டாம் கட்ட கல்வி உதவிநிதி விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால் 21 மாணவர்களுக்கான கல்வி உதவிநிதி கூடிய விரைவில் அவர்களுக்கும் வழங்கப்படும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

Leave a Reply