இந்திய வணிகத் துறைகள் உயிர்பெற 45,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவை- மைக்கி

Malaysia, News

 236 total views,  2 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மலேசியாவில் உள்ள இந்திய வணிகத் துறைகளில் பணியாற்ற 45,000 அந்தியத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். அந்நியத் தொழிலாளர்களை இந்த துறைகளுக்கு தருவித்தால் மட்டுமே இத்துறைகள் உயிர் பெறும் என்று மைக்கி எனப்படும்  மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

உணவகம், ஜவுளிக்கடை, நகைக்கடை, மளிகைக்கடை, முடிதிருத்தகம் என இந்தியர்கள் முன்னெடுத்துள்ள பல தொழில்துறைகள் இன்று ஆள்பலப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.

இந்த ஆள்பலப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உள்ளூர் தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். உள்ளூர் தொழிலாளர்களின் பங்களிப்பு இத்துறைகளில் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத நிலையில் அந்நியத்  தொழிலாளர்கள் தேவை அவசியமாகிறது.

இந்தியர்கள் சார்ந்துள்ள பல துறைகள் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பெரும் சரிவை சந்தித்தன . இப்போது தொழில்துறைகளை அரசாங்கம் தொடங்கலாம் என கூறியுள்ள போதிலும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளோம். இத்துறைகள் உயிர்பெற 45,000 அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.

அந்நியத் தொழிலாளர்கள் பல துறைகளை செயல்படுத்திட முடியாது என்பதை உணர்ந்த்தாலேயே சிங்கப்பூர், பிரிட்டன் போன்ற வளரும் நாடுகளில் அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் கட்டுப்படுத்துவதில்லை.

ஆனால் மலேசியாவில் அந்நியத் தொழிலாளர்களை கட்டுப்படுத்தி பல தொழில்துறைகளுக்கு பூட்டு போட நினைப்பது ஏன்?

அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசாங்கம் அலட்சியப்போக்கினை கடைபிடிக்காமல் துரிதமாக செயல்பட வேண்டும் என்று டத்தோ கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

-தொடரும்…

Leave a Reply