இந்திராணியின் முயற்சியால் ஜாலோங் திங்கி பூர்வக் குடிமக்கள் பகுதியில் புதிய பாலம் ! – சிறப்பு செய்தி

Malaysia, News, Special News

 444 total views,  3 views today

சுங்கை சிப்புட் – 13 ஏப்பிரல் 2022

இங்குள்ள ஜாலோங் திங்கி பூர்வ குடிமக்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள கம்போங் கெனாங் – ஜாலான் பிசாங் செல்லும் வழியில் உள்ள ஆற்றைக் கடக்கக் கல்லால் ஆன இணைப்பு சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.

2020 இல் இருந்து இரண்டு ஆண்டு காலமாக இப்பிரச்சனை தீர்க்கப்படாமல் தொடர்கதையாகவே நீடித்துள்ளது.

பல தரப்பினரை இங்குள்ள மக்கள் அணுகியும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

மார்ச் 15 :

இந்நிலையில், இவ்விவகாரம் சமூக ஆர்வலரும் சுங்கை சிப்புட் Pertubuhan Peneraju Insan அரசு சாரா அமைப்பைச் சேர்ந்தவருமான இந்திராணி செல்வக்குமாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

களத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டபோது இப்பிரச்சனையின் ஆபத்து குறித்துத் தமக்குப் புரிய வந்ததாக அவர் சொன்னார்.

மார்ச் 20 :

எந்த நேரத்திலும் இது சரிந்து விழலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பூர்வக் குடிமக்கள் மேம்பாட்டுத் திணைக்களதின் இயக்குநரை அணுகியுள்ளார் இந்திராணி செல்வக்குமார்.

இவ்வாண்டின் இறுதிக்குள் இப்பிரச்சனை சரி செய்யப்படும் என அந்த இயக்குநர் தம்மிடம் தெரிவித்ததாக i Channelஇடம் பகிர்ந்து கொண்டார்.

அதற்குள் இங்கு பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டு மக்கள் பாதிப்பை எதிர்கொண்டாலோ அல்லது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ என்ன செய்வது எனும் இந்திராணியில் கேள்விக்கு அந்த இயக்குநரிடம் இருந்து தமக்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்றார்.

மார்ச் 29 :

தமது கேள்விக்குப் பதில் கிடைக்காததால் இந்திராணி புத்ராஜெயாவில் இருக்கும் புறநகர் மேம்பாட்டு அமைச்சை நாடினார்.

இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக பேரா மாநில புறநகர் மேம்பாட்டுத் திணைக்களத்தின் அதிகாரியான இந்தான் பைடூரியிடம் இந்த விவகாரத்தை இந்திராணி கொண்டு சென்றார்.

ஏப்பிரல் 1 :

விவரத்தைப் பெற்றுக் கொண்டது மட்டும் இல்லாமல் இந்தான் பைடூரி இந்திராணியுடன் இணைந்து நேரடியாகவே களத்திற்கு வந்து பார்வையிட்டார்.

ஏற்கெனவே இங்குள்ள மக்கள் இவ்விவகாரத்தைக் கொண்டு வந்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படாததையும் இந்திராணி அதிகாரி இந்தான் பைடூரிக்குச் சுட்டிக் காட்டினார்.

கல்வெட்டு முறையில் இணைப்பை அமைத்தால் அது நிரந்தரத் தீர்வாகாது என்பதால் இங்கு உறுதியானப் பாலம் கட்ட இந்திராணியின் முயற்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏப்பிரல் 7 :

பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள வேளையில், 45 நாட்களில் இப்படி நிறைவடையக் கூடும் என தமக்கு புறநகர் மேம்பாட்டுத் திணைக்கள அதிகாரி தெரிவித்ததாக இந்திராணி குறிப்பிட்டார்.

இவ்வட்டார மக்களின் பாதுகாப்புக்கும் போக்கு வரஅத்து வசதிக்காகவும் இந்தப் பாலம் இங்கு கட்டப்பட உள்ளது. இப்பிரச்சனை தீர்க்கப்படப் பெரிதும் உதவிய புறநகர் மேம்பாட்டு அமைச்சுக்கும் அதன்  பேரா மாநில அதிகாரியான இந்தான் பைடூரிக்கும் இந்திராணி தமது நன்றியைக் கூறினார்.

Leave a Reply