இனவாதத்தை தூண்டும் மத போதகர் மீது போலீஸ் புகார்

Malaysia, News

 429 total views,  1 views today

டி.ஆர்.ராஜா

செபெராங் பிறை-

பினாங்கு மாநில அரசு சார இயக்கங்கள் சமூக ஆர்வலர்கள், பொறுப்பாளர்கள் ,ஆலயப் பொருப்பாளர்கள் மத போதகர் ஷாக்கிர் உஸ்தாஸ் நாசோஹா மீது காவல் துறை புகார் செய்தனர்.


சமய சர்ச்சைகள் ஏற்படுத்திய உஸ்தாஸ் ஷாக்கிர் தமது காணொளி பதிவில் இந்நாட்டிலுள்ள இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் டாயாக் சமயத்தினரை இழிவாக பேசியுள்ள காணொளி சமூக ஊடங்களில் பரவியது.


பல இனங்கள் வாழும் இந்நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு உஸ்தாஸ் ஷாக்கிர் மிரட்டலாக இருந்து வருவதாக சமூகத் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையே இவருக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் அரசு சார இயக்கங்கள் ,சமூக ஆர்வலர்கள் ஆலயத் பொறுப்பாளர்கள் ஆகியோர் போலீஸ்புகார் செய்து வருவதாக தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்சல் கூறினார் .நிச்சயம் இதற்கு காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் .

இன்று நடைபெற்ற போலீஸ் புகாரில் 25க்கும் மேற்பட்ட அரசு சார இயக்கங்கள் மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ள புக்கிட் மெர்தாஜம் காவல் துறை தலைமையகத்தில் புகார் செய்திருப்பதாகவும் இவரின் கூற்றை எதிர்த்து பெர்லிஸ் தொடங்கி ஜோகூர் மாநிலங்களில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசு சார இயக்கங்கள், போலீஸ் புகார் மேற்கொண்டு வருவதாகவும் இந்நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளர் ச.வேலாயுதம் கூறினார்.


இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சு ,புக்கிட் அமான் காவல் துறை பார்வைக்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை எடுக்க போவதாகவும் அவர் கூறினார் .அண்மைய காலம் இது போன்ற மத சர்ச்சைகள் எழுந்த வண்ணமாகவே இருகின்றன .நாட்டில் அனைவரும் எந்த சூழ்நிலையில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் இது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக மேலும் நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளர் ச.வேலாயுதம் கூறினார்.


,மேலும் பேசிய பினாங்கு மாநில ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஜீ.குமார் கூறுகையில் இந்த விவகாரத்தை களைவதற்கு காவல் துறையினர் முக்கிய பங்காற்றப்பட வேண்டும். நாட்டின் சுபிட்சத்திற்கும் இது நாள் வரையில் நாம் கட்டி காத்த ஒற்றுமை நிலை நிறுத்துவதற்கு காவல் துறையினரின் நடவடிக்கைதாம் மிக அவசியமான ஒன்றாக கருதுவதாக கூறினார்.


இன்றல்ல! நேற்றல்ல! கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் மலாய்,சீன,இந்தியர், கடாசான்,மூருட் என்ற இன வேறுபாடு இன்றி பல இன சமய நம்பிக்கைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். அவற்றை இனவாத தீமூட்டி உடைக்க நினைக்கும் இது போன்ற சமய போதகர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.

இவர் மீதான நடவடிக்கை நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு நல்லது என்பதை மலேசிய அரசு உணர வேண்டும் எனவும் அரசு சார இயக்கத் தலைவர்கள் கருணா, ந.தனபாலன் ,பொறுப்பாளர் ரஞ்சித மலர் உள்ளிட்ட பலர் கேட்டுக் கொண்டனர் .

Leave a Reply