இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுத் தேர்தல்- டத்தோஶ்ரீ சரவணன்

Malaysia, News, Politics

 192 total views,  2 views today

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடத்தப்படலாம் என கோடி காட்டிய மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதிருந்தே தயாராகும்படி பொது மக்களையும் அரசு ஊழியர்களையும் கேட்டுக் கொண்டார்.

நாடு தொடர்ந்து முன்னேற அரசியல் நிலைத்தன்மை மிக அவசியம். 2030ஆம் ஆண்டு மேம்பாடைந்த நாடாக மலேசியாவை உருவாக்கும் இலக்கு நிறைவேற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

மக்களின் தவறான தேர்வு அவர்களுக்கு தான் பாதிப்பை கொண்ட் வரும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. அந்த தவற்றை மீண்டும் செய்யாமல் சிந்தித்து செயல்படும்படி மனிதவள அமைச்சருமான டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

Leave a Reply