இன்னும் 4 மாதங்களில் பொதுத் தேர்தல்

Malaysia, News, Politics

 260 total views,  4 views today

இன்னும் 4 மாதங்களில் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று பண்டான் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

தமது இந்த எதிர்பார்ப்பு பல காரணங்களை உள்ளடக்கியுள்ளது. அரசாங்கத்திற்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் இடையிலான ஒப்பந்தம் அதில் ஒன்றாகும்.

ஜுலை 31க்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படாது எனவும் ஹாஜி பெருநாளுக்குள் அது நடந்தேறும் என்றும் அவர் சொன்னார்.

நான்கு மாதங்கள் குறுகிய காலமே. ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுவே நான் அம்னோவில் இருந்திருந்தால் ஜூலை இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தும்படி வலியுறுத்தியிருப்பேன் என்று அவர் சொன்னார்.

Leave a Reply