இன, மத வேறுபாடு – ஊழல்களிருந்து விடுபடுவதே மலேசியாவுக்கு உண்மையான விடுதலை ! – கணபதிராவ்

Malaysia, News, Politics

 76 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம் – 25 ஆகஸ்டு 2022

நாட்டின் 65ஆவது விடுதலை நாள் கொண்டாடப்படும் நிலையில் இன, மத வேறுபாடுகளின்றி ஊழலற்ற, மக்களாட்சி முறையிலான அரசாங்கம் அமைவதே விடுதலை நாளின் சிறந்த அடையாளமாக விளங்கிடும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் குறிப்பிட்டார்.

நாடு விடுதலை அடைந்து சொந்த ஆட்சி பெற்று 65 ஆண்டுகளைக் கடக்கின்ற போதிலும் பல இன மக்களை பிரித்தாளும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதுமட்டுமல்லாது மக்களின் வியர்வையாலும் கடின உழைப்பாலும் மேம்பபாடு கண்ட இந்நாடு இன்று ஊழல்வாதிகளினால் உலக அரங்கில் ஊழல் நாடாக அடையாளப்படுத்தப்படுகிறது.

மேலும் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து மக்களாட்சியைக் குழி தோண்டி புதைக்கும் அரசியல் தவளைகளாலும் மலேசியாவின் நற்பெயருக்குத் தொடர்ந்து களங்கம் ஏற்படுகிறது.

இத்தகைய பல்வேறு குழப்பங்களுக்கு இடையே கொண்டாடப்படும் விடுதலை நாள் மலேசியர்களுக்கு மாறுதலாக அமைந்திட வேண்டும் என்று ஷா ஆலம், தாமான் ஸ்ரீ மூடாவிலுள்ள செர்காஸ் பாலர்பள்ளியில் நடைபெற்ற தேசியக் கொடிகள் அன்பளிப்பு நிகழ்வுக்கு பின்னர் கணபதிராவ் குறிப்பிட்டார்.

அலாம் மெகா வட்டார இந்திய சமூகத் தலைவர் எம்.கோபி ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் 85 பாலர் பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

Leave a Reply