இயல்பு நிலையில் பள்ளி நடவடிக்கைகள்- கல்வி அமைச்சர்

Malaysia, News

 146 total views,  1 views today

கோலாலம்பூர்-

வரும் மே 1ஆம் தேதி பள்ளி நடவடிக்கைகள் அனைத்தும் வழக்க நிலைக்கு திரும்புவதாக கல்வி முதன்மை அமைச்சர் டத்தோ முகமட் ரட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
பெருந்தொற்று முன்னதாக இயங்கிய பள்ளி நடவடிக்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வேளையில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை, பள்ளி புறப்பாட நடவடிக்கை, சீருடை, தலை முடி வெட்டியிருத்த ஆகியவை இயல்பு நிலையில் கடைபிடிக்கப்படும்.
கோவிட் 19 பாதிப்புக்குள்ளான மாணவரை தனிமைப்படுத்து பரொசோதனை செய்து தொற்று கண்டிருப்பது உறுதியானால் பெற்றோரை அழைத்து மாணவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம்.
அதே வேளையில் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கோவிட் 19 அறிகுறிகள் தென்பட்டால் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சுயபரிசோதனை செய்து அதில் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் முகக் கவசம் அணிந்து பாடங்களை மீண்டும் போதிக்கலாம் என்று அவர் சொன்னார்.
நாடு இப்போது முடிவு இல்லாத கட்டத்தை அடைந்திருப்பதால் பள்ளி நடாவடிக்கைகள் அனைத்தும் இயல்பு நிலையில் செயல்படும் எனவும் டத்தோ ரட்ஸி ஜிடின் கூறினார்.

Leave a Reply