இலங்கை பணியாளர்களை பணியில் அமர்த்த மலேசியா முன்வர வேண்டும்- இலங்கை மனிதவள அமைச்சர்

Malaysia, News, Politics

 71 total views,  2 views today

கோலாலம்பூர்-

மலேசியாவுக்கு வருகை புரிந்திருக்கும் இலங்கை மனித வள அமைச்சர்
A. P. Jagath Pushpa kumara இன்று மரியாதை நிமித்தமாக மனித வள அமைச்சர் வ. சிவகுமாரை அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மலேசிய – இலங்கை இடையிலான இரு வழி உறவுகள் மற்றும் அந்நிய தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மலேசியாவில் விவசாயம், தோட்டத் தொழில் துறை, பணிப்பெண்கள் போன்ற துறைகளில் பணிபுரிய இலங்கை தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்த வகையில் இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள மலேசிய முன் வர வேண்டும் என்று இலங்கை மனித வள அமைச்சர் ஜெகத் புஷ்பா குமாரா கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply