
இலட்சக்கணக்கில் வேண்டாம் ! 70 ஆயிரம் பேர் போதும் ! – மைக்கி
18 total views, 3 views today
குமரன் | 19-1-2023
இந்திய வியாபாரிகள் எதிர்நோக்கும் அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பது தொடர்பாக இந்திய வியாபாரிகள் 10 ஆண்டு காலமாகப் போராடி வருவதாகவும். இதுவரை முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்றும் பல இந்திய துறை சார்ந்த வியாபாரங்களுக்கு அந்நிய தொழிலாளர் தருவிப்பது முடக்கப்பட்டுள்ளது குறித்து மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ என்.கோபாலகிருஷ்ணன் பிரதமரிடம் முறையிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாங்கள் இலட்சக் கணக்கில் அந்நியத் தொழிலாளர்களைக் கேட்கவில்லை. பிரிமாஸ் , பிரேஸ்மா, மிம்தா, ஜவுளி சங்கம் முடிதிருத்தும் சங்கம், மளிகைக் கடை என அனைத்து துறைக்கும் 70 ஆயிரம் பேர்களைத்தான் கேட்கிறோம்.”
தங்கள் விளக்கங்களைக் கேட்ட பிரதமர், நிச்சயம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனி அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதில் இடைத்தரகர் முறை கிடையாது எனவும் , அதற்கான ஆய்வு நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பதை எளிமைப் படுத்தும் முறையும் ஆய்வு செய்யபடுகிறது என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தாக டத்தோ கோபாலகிருஷ்ணன் மைக்கி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.