இல்லத்தரசிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் அடுத்தாண்டு அமல்- டத்தோஶ்ரீ சரவணன்

Malaysia, News

 198 total views,  3 views today

கோலாலம்பூர்-

இல்லத்தரசிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் அடுத்தாண்டு செயல்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 14இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போது அட்டெர்னி ஜெனரல் அலுவலகத்துடன் இணைந்து மனிதவள அமைச்சு இத்திட்டத்திற்கான சட்டத்திட்டங்கள் வரையறுக்கின்றது எனவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்றும் டத்தோஶ்ரீ சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கயில் கூறப்பட்டுள்ளது.
2.99 மில்லியன் என மதிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து இல்லத்தரசிகளும் பங்குபெறும் இத்திட்டத்தின் வாயிலாக விபத்து, நோய், அல்லது இறப்பு போன்ற சம்பவங்களுக்கு எதிரான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஏழ்மை நிலை, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 150,000 இல்லத்தரசிகளுக்கு அரசாங்கத்தால் இத்திட்டத்தில் பங்கேற்கப்படுவர். ஏனையவர்கள் தன்னார்வல முறையில் இணைக்கப்படுவர் என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

Leave a Reply