இஸ்மாயில் சப்ரியே பிரதமர் வேட்பாளர்

Malaysia, News, Politics

 228 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலின்போது தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை களமிறக்க அம்னோ உச்சமன்றம் முன்மொழிந்துள்ளது.

அம்னோவின் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற உச்சமன்றக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இஸ்மாயில் சப்ரியை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு அம்னோ உச்சமன்றம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது என்று தலைமைச் செயலாளர் அஹ்மாட் மஸ்லான் குறிப்பிட்டார்.

Leave a Reply