இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக நடந்து கொள்ள வேண்டும் ! கட்சி பின்பற்றாளனாக அல்ல ! – அந்தோணி லோக்

Malaysia, News, Politics, Polls

 87 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 25 செப் 2022

அம்னோ கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கின்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதில் கட்சியின் பின்பற்றாளனாக இல்லாமல் ஒரு பிரதமராக நடந்து கொள்ள வேண்டும் என ஜ.செ.க.வின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

ஒரு வேளை வருகின்ற மழைக்காலத்தில் தேர்தலை நடத்தக்கூடிய துணிச்சல் இஸ்மாயில் சப்ரிக்கு இருந்தால், அதற்கானத் தண்டனையை பொதுத் தேர்தலில் மக்களே கொடுத்திடுவார்கள் எனவும் அவர் சொன்னார்.

எந்த கோரிக்க்கையையும் அல்லது வலியுறுத்தலையும் அம்னோவின் தலைவர் ஸாஹிட் முன்வைத்திருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பிரதமராக மிகவும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என அந்தோணி லோக் சொன்னார்.

“இதனை நாடாளுமன்றத்திலும் நான் கூறியிருந்தேன், நீங்கள் ஒரு பிரதமர்.”

இவ்வாண்டே நாட்டின் 15வது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேசிய முன்னணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தி இருந்தார்.

இதரச் செய்திகள்

பேருந்து கவிழ்ந்ததில் 38 தொழிற்சாலைப் பணியாளர்கள் காயம் !

3ஆவது முறையாக பிரதமர் பதவியை ஏற்கத் தயார் ! – துன் மகாதீர்

15வது பொதுத் தேர்தலில் தேசியக் கூட்டணியின் எதிரி தேசிய முன்னணி ! – நேரடியாக அறிவித்த முகிதீன்

கடந்த செப் 17 ஆம் நாள் பேசிய அவர் மழைக்காலமாக இருந்தாலும், வெள்ளமாக இருந்தாலும் தேர்தலைச் சந்திக்கத் தயார் என்றார்.

அதே நாளில், மிக விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனும் உறுதிப்பாட்டை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கோடிக்காட்டி இருந்தார்.

விளம்பரம்

Leave a Reply