
ஈப்போ பாராட் மஇகா தேர்தலில் ஜெயகோபி வெற்றி
312 total views, 1 views today
ஈப்போ-
நடந்து முடிந்த ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தேர்தலில் எஸ்.ஜெயகோபி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடப்பு தலைவரான ஜெயகோபி 154 வாக்குகள் பெற்று தமது பதவியை தற்காத்துக் கொண்ட வேளையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட டத்தோ தங்கராஜா 135 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

துணைத் தலைவர் பதவிக்கு பாலையாவும் என்.லோகநாதனும் போட்டியிட்ட நிலையில் 153 வாக்குகள் பெற்று பாலையா துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லோகநாதனுக்கு 141 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் தோல்வி கண்டவர்களும் இணைந்தே செயல்படலாம் என்று ஜெயகோபி கூறினார்.