ஈவு இறக்கமற்ற பள்ளி முதல்வரை இடமாற்றம் செய்யுங்கள் ! – ஆசிரியர்கள் கோரிக்கை

Education, Malaysia, Malaysia, News

 59 total views,  4 views today

– குமரன் –

கோலா பிலா – 3 செட்டம்பர் 2022

இங்குள்ள செனாலிங் இடைநிலைப் பள்ளி முதல்வரையும் நிர்வாகத்திற்கான மூத்த ஆசிரியரையும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அப்பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருக்கும் பதாகை இப்போது சமூக ஊடகங்களில் மிகத் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அந்தப் பதாகையின்படி, ஈவு இறக்கமற்ற, சிந்தனைக் கோளாறு கொண்ட அந்தப் பள்ளி முதல்வர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோலா பிலா மாவட்டக் கல்வி அலுவலகம், மாநிலக் கல்வித் திணைக்களம், கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு அப்பள்ளி ஆசிரியர்களே கோரிக்கை வைத்துள்ளனர்.

நேற்று தொடங்கி சமூக ஊடகங்களில் இந்தப் பதாகை இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாகவே, தங்களின் மேல் நிலை அதிகாரி அல்லது Ketua Jabatanக்கு கீழ்ப்பணிந்து போகும் ஆசிரியர்கள் தற்போது வெகுண்டெழுந்து இதுபோன்ற பதாகையைத் தொங்க விட்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வாறான அழுத்தத்தைச் சந்தித்துள்ளார்கள் என சிந்திக்கத் தோன்றுகிறது.

தமது விருப்பத்திற்கு இந்தப் பள்ளியின் முதல்வர் அட்டூழியம் புரிவதால் பல ஆசிரியர்கள் பணி விலகல் செய்யக்கூடும், அதனைத் தடுப்பதற்கு கல்வி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் பதாகையில் குறிப்பிட்டுள்ளனர்.

இவரது போக்கால் நிர்வாகம் மட்டும் இன்றி மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது விருப்பத்திற்குச் செயல்படாத ஆசிரியர்களை மிரட்டும் படலமும் அவ்வப்போது நேர்வதாகக் கூறும் அப்பள்ளி ஆசிரியர்கள், இவரது போக்கை இதற்கு மேலும் தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது எனக் குறிப்பிடுகின்றனர். ‘

இது போல் பல பள்ளிகளிலோ அல்லது மற்ற அரசாங்க அலுவலகங்களில் தங்களின் உயர் அதிகாரிகளை எதிர்த்து ஊழியர்கள் போர்க்கொடி தூக்கினால் என்னவாகும் நிலைமை ?

Leave a Reply