உடன்படிக்கை ரத்தாகவில்லை

Malaysia, News

 188 total views,  2 views today

கோலாலம்பூர்-

மக்களவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்ததால் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான உடன்படிக்கை ரத்தாவி விட்டது என பொருள்படாது என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ வான் ஜூனாய்டி தெரிவித்தார்.

உடன்படிக்கையை ரத்து செய்யலாம் என்று இரு தரப்பினரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே உடன்படிக்கை ரத்தாகுமே தவிர நேற்றைய சம்பவத்திற்கு மத்தியில் இயல்பாகவே உடன்படிக்கை ரத்தாகாது என்று அவர் சொன்னார்.

சொஸ்மாவின் துணை சட்டங்களை தொடர்பிலான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது தோல்வி அடைந்த காரணத்தினால் அரசாங்கத்துடன் செய்துக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையை எதிர்க்கட்சியினர் மீறி விட்டனர், உடன்படிக்கை ரத்தாகி விட்டது என்று அம்னோவின் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி இதற்கு முன் கூறியிருந்தார்.

அரசாங்கத்துடனான உடன்படிக்கை நாங்கள் மீறவில்லை, மாறாக மக்களவையில் மக்கள் பிரதிநிதி எனும் நிலையில் எங்களது கடமையை மட்டுமே நிறைவேற்றினோம் என்று ஜசெகவின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.

Leave a Reply