உடல் சுகாதாரப் பரிசோதனைக்காக ஆண்டுக்கு ஒருமுறை அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்கலாம் !

Health, Malaysia, News

 27 total views,  3 views today

– குமரன்

கோலாலம்பூர் – 19 செப் 2022

நாட்டில் 40 வயதுக்கும் மேல் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் உடல் சுகாதாரப் பரிசோதனைக்காக விடுமுறை எடுக்கலாம். மேலும், இதர அரசாங்க ஊழியார்கள் தங்களின் தனி விவரங்கள் கோப்பில் அவர்களின் உடல்நிலை சுகாதாரம் குறித்த அறிக்கையை இணைக்க வேண்டும் என பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் ஷாஃபிக் அப்துல்லா தெரிவித்தார்.

சமூகத்தில் உடல் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் முன்னெடுப்புக்கு எடுத்துக்காட்டாக பொதுச் சேவைத் துறை ஊழியர்கள் இருக்க வேண்டும் எனும் கொள்கையின் அடிப்படையில் இது அறிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அனைத்து பொதுச் சேவைத் துறை ஊழியர்களுக்கு இது கட்டாயமல்ல. ஆனால், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், அதற்காக தங்களின் ஆண்டு விடுப்புகளில் இருந்து கழிக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் குறித்து கடந்த வாரம் பேசிய  சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின், 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்கீழ் இஃது இணைக்கப்பட தமது அமைச்சு கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், சேவையின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி, தங்களின் அதிகாரிகளை சுகதாரப் பரிசோதனை செய்ய இலாகாத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கட்டளையிட வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

நீரிழிவு, இரத்த அழுத்தம் இதயப் பிரச்சனை போன்ற தொற்றுப் பரவாத நோய்கள் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும்.

நோய்வாய்ப்படாத அரசு ஊழியர்கள் இதுபோன்ற சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை. குறைந்தது உடல் எடை, உயரம் ஆகியத் தகவல்களை தங்களின் சுய விவரக் கோப்பில் இணைக்க வேண்டும்.

அரசாங்க மருத்துவமனைகளிலும் கிளினிக்குகளிலும் ஆண்டு சுகாதாரப் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். ஆனால், தனியார் மருத்துவ நிலையங்களில் சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்கிறவர்களின் எந்த வித செலவினையும் அரசாங்கம் (தாங்கள் பணிபுரியும் இலாகா) ஏற்காது.

Leave a Reply