உடைமைகளை காலி செய்ய அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவு?

Malaysia, News, Politics

 281 total views,  1 views today

கோலாலம்பூர்-

வெகு விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அலுவலகத்தை காலி செய்யுமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நேற்று பிற்பகலில் சில அமைச்சின் அதிகாரிகள் இந்த உத்தரவை பெற்றுள்ளதாக உத்துசான் மலேசியாவின் செய்தியை மேற்கோள் காட்டி  selayangpandang.net/ என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘தங்களது அறையிலிருந்து உடைமைகளை காலி செய்யுமாறு தலைமைச் செயலாளரிடமிருந்து உத்தரவு கிடைக்கப்பெற்றதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, பிற அமைச்சின் அதிகாரிகள் இத்தகைய உத்தரவை பெறவில்லை எனவும் வழக்கம்போல் தங்களது பணி நடைபெறுகிறது எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply