
உணவங்களிலும் காப்பிக்கடைகளிலும் மதுபான விற்பனை நிறுத்தப்படலாம்
330 total views, 1 views today
கோலாலம்பூர்-டிச.7-
அரசாங்கத்தின் புதிய கொள்கையால் நாடு தழுவிய நிலையிலான உணவங்களிலும் காப்பி கடைகளிலும் மதுபான விற்பனை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி முதல் இஸ்லாம் அல்லாதோர் உணவகங்களிலும் காப்பி கடைகளிலும் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் புதிய கொள்கை கூறுகிறது.
இத்தகைய புதிய கொள்கையினால் 60% உணவகங்களும் 80% காப்பிக் கடைகளும் மதுபான விற்பனையை நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மலேசியா-சிங்கப்பூர் காப்பிக்கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வோங் தியூ ஹோன் தெரிவித்தார்.
மதுபான விற்பனைக்கென புதிதாக உரிமம் பெறுவதற்கு வெ.840 முதல் வெ.1320 வரையிலும் செலுத்த வேண்டும் என்பது ஏற்புடையதாக இல்லை.
சுங்க வரித்துறையின் இந்த புதிய கொள்கை இஸ்லாம் அல்லாதோர் உணவகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 60 விழுக்காடு என்பது 15,000 உணவங்களையும் 80 விழுக்காடு என்பது 20,000 காப்பிக்கடைகளையும் உள்ளடக்கியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.