உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் ! – ஜோர்ஜ் குணராஜ் (Video News)

Malaysia, News, Politics

 496 total views,  2 views today

கிள்ளான் – 2 ஏப்பிரல் 2022

விரைவில் நடைபெறவுள்ள பிகேஆர் கட்சி தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் அறிவித்தார்.

பிகேஆர் கட்சியை வலுப்படுத்தவும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் கரங்களுக்கு வலு சேர்க்கவும் தம்முடைய இந்த  முடிவு அமைந்துள்ளது என்று கோத்தா ராஜா கெ அடிலான் தொகுதி ஆண்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டபோது இவ்வாறு கூறினார்.

கெ அடிலான் கட்சியின் போராட்டதை வென்றெடுக்கும் நோக்கில் களப்பணி ஆற்றி மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும். சிறந்த சேவையாளர்களையே மக்கள் நேசிப்பர் எனும் அடிப்படையில் களமிறங்கி மக்கள் சேவையில் ஈடுபடும் தாம், கட்சியின் உயர்மட்ட பதவிக்கு போட்டியிட எத்தனித்தேன்.

இதன் தொடர்பில் கட்சியின் தலைவர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள்  என பலரிடம் கலந்தாலோசித்து உரிய ஆலோசனை கிடைக்கப்பெற்ற பின்னரே கட்சி தேர்தலில் களமிறங்குகிறேன் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின்  சமூகத் தொடர்பு சிறப்பு அதிகாரியுமான ஜோர்ஜ் குணராஜ் தெரிவித்தார்.

Leave a Reply