உதவிப் பொருட்கள் வழங்கிய கேசவன் – வாடகை வாகன ஓட்டுனர் சங்கம் நன்றி

Malaysia, News

 248 total views,  2 views today

சுங்கை சிப்புட்

நாட்டையே உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று நடமாட்டக் கட்டுப்பாட்டால் பயணிகள் இன்றி வருமானம் இழந்து வரும் சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு உதவியாக உணவுப் பொருட்கள் அனுப்பிய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனுக்கு சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் நன்றி தெரிவித்துக் கொண்டது

ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் நடமாட்ட கட்டுப்பாட்டின் போது உதவித்தொகை வழங்கியதை போன்று இம்முறையும் தாமே முன்வந்து ஓட்டுனர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கியது பாராட்டுக்குரியது என ஓட்டுநர்கள் சார்பில் சங்கம் நன்றியினை தெரிவித்துக் கொண்ட வேளையில் இதே போன்று அந்தந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வட்டாரத்தில் இருக்கும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு உதவ முன்வருமாறும் கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply