உத்துசான், என்எஸ்டி-க்கு மக்களவையில் அனுமதி மறுப்பு

Malaysia, News

 251 total views,  1 views today

கோலாலம்பூர்-

திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் செய்திகளை தொகுத்து வழங்குவதற்கு உத்துசான் மலேசியா, நியூ ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகிய ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் வரலாற்றிலேயே நாடாளுமன்றச் செய்திகளை தொகுத்து வழங்குவதற்கு உத்துசான் மலேசியாவுக்கு அனுமதி மறுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மக்களவையின் 14ஆவது கூட்டத் தொடரை தொகுத்து வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகங்களின் பெயர் பட்டியலில் உத்துசானும் என்எஸ்டியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவைக் கூட்டத்தொடர் செய்திகளை தொகுத்து வழங்குவதற்கு ஆர்டிஎம், மலேசிய தகவல் துறை, ஃபினாஸ் ஆகியவை அதிகாரப்பூர்வ தகவல் ஊடகங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மின்னியல் ஊடகம் டிவி3, ஆஸ்ட்ரோ அவானி, தேசிய மொழி நாளிதழ்கள் சினார் ஹரியான், பெரித்தா ஹரியான், ஆங்கில நாளிதழ்கள் தி ஸ்டார், தி சன், சீன நாளிதழ் சின் சியூ டெய்லி, நன்யாங் சியாங் பாவ், தமிழ் நாளிதழ் மலேசிய நண்பன், அனைத்துலக ஊடகம் ஏஎஃப்பி ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் டத்தோ அஸார் அஸிஸான் ஹருன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

Leave a Reply