உலக அரங்கில் மலேசியாவின் பெயரையும் புகழையும் PERKESO நிலைநாட்டியுள்ளது! – மனிதவள அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

Malaysia, News

 24 total views,  1 views today

கோலாலம்பூர் | 27-05-2023

சொக்சோ நிறுவனத்தின் நிர்வாகம் இந்த ஆண்டில் சிறந்த செயல்திறனை உருவாக்கியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

விருதுகள் உட்பட தேசிய மற்றும் அனைத்துலக அளவில் சொக்சோ சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது.

பொதுச் சேவையில்,தொழில் துறையில் ஆசியான் சமூகம் பாதுகாப்பு அங்கீகார விருதை (ASEAN Social Security Association Recognition Award) விருதை சொக்சோ வென்றுள்ளது.

Team Excellence PERKESO குழு சர்வதேச மாநாட்டில் தங்க விருதையும் (Gold Award di International Convention On Quality Control Circle (ICQCC) வென்றுள்ளது. கடந்த ஆண்டில் சொக்சோவின் சாதனைகளின் மிகவும் உச்சமாக விளங்குகிறது.

ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் சொக்சோ நிறுவனம் அமைக்கப்பட்டது.

சொக்சோவின் தலைமை செயல் முறை அதிகாரி Dato’ Sri Dr. Mohammed Azman 2025 ஆம் ஆண்டு வரை சர்வதேச சமூக பாதுகாப்பு சங்கம் உலக அமைப்பின் தலைவராக
(Presiden International Social Security Association (ISSA)) தேர்வு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

இவ்வேளையில் இவருக்கும் சொக்சோவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த சாதனை SOCSO இன் பெயரையும் புகழையும் உயர்த்தியது மட்டுமல்ல
உலக அளவில், மலேசியாவின் பெயரையும் நிலை காட்டியுள்ளது. அரசாங்கம் 2023 பட்ஜெட்டில் RM 313 மில்லியனை சொக்சோவுக்கு ஒதுக்கியுள்ளது.

தேசிய சமூக பாதுகாப்பு மற்றும் ஐந்து சந்தை திட்ட முயற்சிகள் தொடர் இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின்படி அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற
அனைத்து SOCSO உறுப்பினர்களும் தீவிரமாக செயல்படுத்துகிறார்கள் என்று நம்புகிறேன்.

மக்களின் நல்வாழ்வு மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சொக்சோ முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சொக்சோவைச் சேர்ந்த 202 பணியாளர்களுக்கு சிறந்த விசுவாசமான சேவை விருதுகள் வழங்கி நேற்று சிறப்பிக்கப்பட்டன. இந்த விழாவுக்கு தலைமை ஏற்ற மனிதவள அமைச்சர் சிவகுமார் சொக்சோவின் சாதனைகளை பட்டியலிட்டு வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply