உலு சிலாங்கூரை மஇகா தற்காக்கும்- டத்தோஶ்ரீ சரவணன்

Malaysia, News, Politics

 80 total views,  1 views today

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியை மஇகா தற்காக்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் தொகுதியில் அம்னோ வேட்பாளர் களமிறங்கக்கூடும் என்ற ஆரூடம் வலுத்து வரும் நிலையில் இவ்விவகாரம் குறித்து தேசிய முன்னணி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

பிகேஆர் வசமுள்ள இத்தொகுதியை மீட்டெடுக்க அம்னோ வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என்று உலு சிலாங்கூர் அம்னோ தொகுதி இதற்கு முன் கோரிக்கை வைத்திருந்தது. தொகுதி பங்கீடு தொடர்பில் தேமுவில் உள்ள 4 கட்சிகளும் கலந்து பேசி இறுது முடிவு எட்டப்படும் என்று டத்தோஶ்ரீ  சரவணன் கூறினார்.

விளம்பரம்

Leave a Reply