ஊக்க தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லையெனில் நிலை மாறுமே தவிர தகவல்கள் அழிக்கப்படாது

Health, Malaysia, News

 199 total views,  1 views today

கோலாலம்பூர்-

ஊக்கத்தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதாவர்களில் மைசெஜாத்ரா செயலியில் முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் என நிலை மாறுமே தவிர அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தகவல்கள் அழிக்கப்படாது என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் போலியானவை என்றும் மைசெஜாத்ரா நிலை மாறுமே தவிர தகவல் அழிக்கப்படாது என்று தமது முகநூல் பக்கத்தில் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

சினோவெக் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஊக்க தடுப்பூசியை செலுத்தி கொள்ளவில்லையெனில் வரும் ஏப்ரல் 1 முதல் மைசெஜாத்ரா செயலியின் நிலை இயல்பாகவே மாறிவிடும் என்று சுகாதார அமைச்சு இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.

Leave a Reply