ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் பிஎச்-ஐ வெற்றியடையச் செய்யுமா?

Malaysia, News, Politics

 102 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான முழக்கம் கொட்டப்பட்டு விட்டது. கடந்த 10ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் நிலையில் அரசியல் கட்சிகள் யாவும் களப்பணியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

இந்த தேர்தலில் தேசிய முன்னணி, மகாதீரின் Gerakan Tanah air கூட்டசியை காட்டிலும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகால தேசிய முன்னணியின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி.

அத்தகைய கூட்டணி 22 மாதங்களில் ஆட்சி அதிகாரத்தை இழந்து மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது காலத்தின் கோலமாகும்.

தனக்கான ஆட்சியை தக்க வைப்பதில் வியூகங்கள் வகுத்து செயல்படுவது அவசியமாகும். வியூகங்கள் வகுக்கப்படாமல் பிரதமர் பதவிக்கான போட்டா போட்டியாலே மக்கள் வழங்கிய ஆட்சி அதிகாரத்தை இழந்தது பிஎச் கூட்டணி.

மக்களுக்கான செயல் திட்டங்களை காட்டிலும் பிரதமர் பதவிக்காக பிஎச் தலைவர்கள் போட்ட குடுமிப்பிடி சண்டையை பார்த்து மக்கள் சலிப்படைந்தது தான் மிச்சம்.

அதேபோன்று தான் தற்போது நடைபெறவுள்ள 15ஆவது பொதுத் தேர்தலிலும் தவறான வியூகங்களால் மண்ணை கவ்வ காத்துக் கொண்டிருக்கிறது பிஎச் கூட்டணி.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம் என்று கூறிக் கொண்டிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள்  அம்னோ, தேசிய முன்னணி தலைவர்களை ஊழல்வாதிகளாக குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதை தவறென்று சொல்லி விடமுடியாது. ஆனால் ஊழலை விடவும் வறுமையும் பொருளாதார வீழ்ச்சியுமே சாதாரண மக்களின் அடிதட்டு பிரச்சினையாக உள்ளது. அதனை முதலில் பக்காத்தான் ஹராப்பான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊழல்வாதிகள் அரசியல்வாதிகளாகவும் அரசு பணியாளர்களாகவும் சமூகச் சேவகர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு எதிரான போராட்டம் அடிமட்ட மக்களை வறுமையிலிருந்து மீட்டுவிடாது. அதுவே வறுமையை ஒழித்தால் ஊழலுக்கான அடித்தளமே இல்லாமல் போய்விடும்.  இதனை முதலில் பக்காத்தான் ஹராப்பான் சிந்திக்க வேண்டும்/ களத்தில் இறங்க வேண்டும்.

Leave a Reply