ஊழல்வாதிகள் சிறை செல்ல பக்காத்தான் ஹராப்பானுக்கு அதிகாரம் வழங்குக- ஷாஷா

Malaysia, News, Politics

 175 total views,  1 views today

ரா.தங்கமணி

கம்பார்-

ஊழல் செய்து நாட்டை சீரழித்த ஊழல்வாதிகள் சிறைக்கு செல்ல வேண்டுமானால் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை மலேசியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் திருமதி ஷாஷா வீரையா வலியுறுத்தினார்.

கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட தேசிய முன்னணி ஆட்சியில் புற்றீசல் கிளம்பிய ஊழல் இன்று நாட்டையே சிரழிக்கும் புற்றுநோயாக உருவெடுத்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்த ஊழலால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு அதன் தாக்கம் மக்களின் அன்றாட வாழ்வில் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வு  மக்களின் இயல்பு வாழ்க்கை புரட்டி போட்டுள்ள நிலையில் தூய்மையான, நாட்டை மேம்படுத்தக்கூடிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை ஆட்சி ஆள மக்கள் அதிகாரம் வழங்க வேண்டும்.

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  பிரதமரானால் நாட்டை மிகச் சிறப்பாக வழிநடத்துவார் என்பதோடு ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளை சந்திப்பர். அதன் மூழ்ல் அவர்கள் சிறை தள்ளப்படுவர் என்று ஷாஷா  கம்பார் தொகுதி இந்திய வாக்காளர்களை சந்தித்த பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply