ஊழல் அமைச்சர்களை சிறையில் அடைப்பேன்- அன்வார்

Malaysia, News, Politics

 219 total views,  1 views today

உலு சிலாங்கூர்-

வரும் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று நான் பிரதமராக பதவியேற்ற மறுநாளே கோடிக்கணக்கில் ஊழல் செய்த அமைச்சர்களை சிறையில் தள்ளுவேன் என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டை கொள்ளையடித்து மக்களின் சிறப்பான வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியவர்கள் இந்த ஊழல் அமைச்சர்கள்.

எனது தலைமையிலான அரசாங்கம் ஊழலுக்கு எதிராக போராடும் நிலையில் இதற்கு முன் பதவியில் இருந்து ஊழல் செய்த அமைச்சர்கள் நிச்சயம் சிறையில் அடைக்கப்படுவர் என்று உலு சிலாங்கூர் பிஎச் வேட்பாளர் டாக்டர் சத்திய பிரகாசை ஆதரித்து பிரச்சாரம் செய்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.

Leave a Reply