எங்கேயும் ஒளிந்து கொள்ளவில்லை-ஜெலன்ஸ்கி

News, World

 325 total views,  1 views today

கீவ்-

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் ராணுவத் தாக்குதல் 13 நாளாக நீடித்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களில் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுததி உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து தலைநகர் கீவ்வை நோக்கி ரஷிய படைகள் நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எங்கு இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், தாம் தலைநகர் கீவ்வில் தான் இருப்பதாகவும், எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
பாங்கோவா தெருவில்தான் தாம் வசிப்பதாகவும் தாம் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்றும் என்றும் அந்த வீடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டை காக்கும் போரில் வெற்றி பெற முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply