எண்ணிக்கை கட்டுப்படுத்தாவிடில் மலேசியா அந்நியர்களின் வெள்ளக்காடாகி விடும்- சரவணன்

Malaysia, News

 179 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

தேங்கி கிடக்கும் தொழில்துறைகள் மீண்டும் செயல்படுவதை உறுதிச் செய்யும் போதுமான அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் மனிதவள அமைச்சு கவனம் செலுத்துகிறது. அதே வேளையில் அளவுக்கு அதிகமான அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டால் நாடே அந்நியர்களின் வெள்ளக்காடாகி விடும் என்று அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு  மனிதவள அமைச்சு முழுமையான அனுமதி வழங்குகிறது. ஆனால் உள்துறை அமைச்சு, குடிநுழைவு இலாகா போன்றவற்றின் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது.

1.3 மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் தற்போது நாட்டில் வேலை செய்கின்றனர். தொடர்ந்து 240,000 பேருக்கு குடிநுழைவு துறையின் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் 6 லட்சம் பேர் மருத்துவப் பரிசோதனை முடித்து அனுமதிக்காக தங்களது  நாட்டிலேயே காத்து கிடக்கின்றனர்.

அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் முதலாளிமார்கள் தங்களது பிரச்சினை என்னவென்று தெளிவாக எடுத்துக் கூறினால்தான் அப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண முடியும் என்பதோடு, அனைத்துத் தொழில்துறைகளையும் அந்நியத் தொழிலாளர்களை கொண்டு நிரப்பி விட முடியாது.

அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு நிரப்ப முடியாத துறைகளில் மட்டுமே அந்நியத் தொழிலாளர்கள் நிரப்பப்பட வேண்டும். இல்லையேல் நாடே அந்நியர்களின் வெள்ளக்காடாகி விடும் என்று பல்வேறு தொழில்துறை பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

Leave a Reply