எந்த இடத்திலும் அறிவிப்பை வெளியிட பிரதமருக்கு உரிமை உள்ளது

Malaysia, News, Politics

 217 total views,  2 views today

கோலாலம்பூர்-

குறைந்தபட்ச சம்பளம் வெ.1,500 உட்பட எந்த அறிவிப்பையும் எந்த இடத்தில் வெளியிட பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு உரிமை உண்டு என்று பிரதமர் துறையின் (சிறப்புப் பணிகள்) துணை அமைச்சர் மஸ்துரா முகமட் யாசித் தெரிவித்தார்.
அறிவிப்புகளை வெளியிட இஸ்மாயிலுக்கு உரிமை உள்ளது, ஏனெனில் இது பிரதமரின் தனிச்சிறப்பு.

“அம்னோ மாநாட்டில் பிரதமர் அறிவிப்பு செய்தது குறித்து பேசிய அவர், தனக்கு பொருத்தமானதாக கருதும் எந்த இடத்திலும் அவர் அறிவிப்பை வெளியிடலாம் என்று மக்களவில் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ மாநாட்டில் தனது உரையில் குறைந்தபட்ச ஊதிய விகிதம் வெ.1,500 பற்றிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்மாயிலின் நடவடிக்கையை ஆதரித்து மஸ்துரா இவ்வாறு கூறினார்.

Leave a Reply