என்னை ஆதரியுங்கள்- வீரன்

Malaysia, News, Politics

 170 total views,  2 views today

கோலாலம்பூர்-

மஇகா மத்திய செயலவைக்கு போட்டியிடும் தனக்கு பேராளர்கள் ஆதரவு நல்க வேண்டும் தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் எம்.வீரன் கேட்டுக் கொண்டார்.

கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் ஆகியோர் முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கவும் கட்சி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைந்திடவும் தமக்கு ஆதரவு கிடைக்கப்பெற வேண்டும்.

ஏற்கனவே மஇகா மத்திய செயலவை உறுப்பினராக இருந்தபோது பல ஆக்ககரமான திட்டங்கள், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது கட்சியின் சீரிய பணிகளை தொடர என் 20-இல் போட்டியிடும் தனக்கு பெரும்பான்மை பேராளர்கள் ஆதரவு வழங்குவர் என நம்பிக்கை கொள்வதாக வீரன் கூறினார்.

Leave a Reply