என்ன சேவை செய்துள்ளீர்கள் என வேட்பாளரிடம் கேள்வி எழுப்புங்கள் ! – ஜெயகோபி

Malaysia, News, Politics, Polls

 69 total views,  1 views today

இரா. தங்கமணி

ஈப்போ – 9/11/2022

15 ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்களிடம் வாக்குறுதியை விட செயலறிக்கையை வாக்காளர்கள் கேட்க வேண்டும் என்று அத்தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் எஸ்.ஜெயகோபி வலியுறுத்தினார்.

வாக்குறுதியை யார் வேண்டுமானாலும் வழங்கலாம். வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதிகள் ‘புனித நூல் அல்ல’ என்று அந்தர் பல்டியும் அடிக்கலாம். இது மலேசியர்களுக்கு புதுமையானதும் இல்லை.

புந்தோங் தொகுதியில் வசிக்கும் என்னால் இங்கு என்னென்ன சேவைகள் செய்துள்ளேன் என்ற செயலறிக்கையை வழங்க முடியும். எனது சேவைகள் என்ன என்பதை இங்குள்ள மக்கள் நன்கு அறிவர்.

நான் ஜெயித்தால் அதை செய்வேன், இதை செய்வேன் என வாக்குறுதி வழங்கும் ஒவ்வொரு வேட்பாளர்களிடம் இதற்கு முன் இங்குள்ளவர்களுக்கு என்ன சேவை செய்துள்ளீர்கள் என்ற கேள்வியை வாக்காளர்கள் எழுப்ப வேண்டும் என்று ஜெயகோபி கேட்டுக் கொண்டார்.

Leave a Reply