என் வாக்கை யாரோ கள்ள ஓட்டு போட்டுட்டாங்க ! – மூத்த வாக்காளர் காவல் துறையில் புகார் !

Crime, Malaysia, News, Politics, Polls

 60 total views,  1 views today

குமரன் | 19-11-2022

பிற்பகல் மணி 3.00 – ரவாங், சிலாங்கூர் : தமது வாக்கை தமக்குப் பதிலாக யாரோ ஒருவர் செலுத்தி விட்டார்கள் எனக் கூறி காவல் துறையில் புகார் அளித்துள்ளார் சிலாங்கூரைச் சேர்ந்த மூத்த வாக்காளர் ஒருவர்.

நண்பகல் 12.30 மணி அளவில் இங்குள்ள புக்கிட் செந்தோசா இடைநிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்த 70 வயது பதிநாதன் காலையிலேயே வாக்களித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, இது அவருக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

தாம் இன்னும் வாக்களிக்கவிலை எனவும் தமது கை விரலில் மையும் இல்லை எனவும் காட்டி இருக்கிறார்.

யாரொ தமது அடையாள அட்டையைத் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாக இன்று தம்மால் வாக்களிக்க முடியாமல் போனது என பணி ஓய்வு பெற்ற பதிநாதன் காவல் துறை விசாரணையைக் கோரி இருக்கிறார்.

Leave a Reply