எம்ஏசிசி வளையத்தில் எம்ஏபி கட்சியினரா?

Uncategorized

 341 total views,  1 views today

கோலாலம்பூர்-

மித்ரா மானிய விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ள 16 பேரில்  எம்ஏபி எனப்படும் மலேசிய முன்னேற்ற கட்சியினர் அடங்கியுள்ளனர் எனும் தகவல் அரசியல் பரபரப்பை கூட்டியுள்ளது.

எம்ஏசிசி கைது நடவடிக்கையில் வேதமுர்த்தியின் ஆட்களா? என்ற கேள்வியோடு சமூக ஊடகத்தில் வலம் வரும் தகவல் அடிப்படையற்ற குற்றச்சாட்டு என கூறப்படுகிறது.

மித்ரா மானியம் தொடர்பில் புகார் செய்ததே எம்ஏபி கட்சிதான். நிலைமை அவ்வாறு இருக்க சொந்த கட்சியினரே தவறிழைக்க அனுமதிக்கப்படுவார்களா? எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்கள் பகிரப்படும் நிலையில் எம்ஏபி கட்சியின் தலைவர் பொன்.வேதமூர்த்தி உண்மைத்தன்மையை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply